விக்ரம் - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் இணைந்த முக்கிய நடிகர்! யார் தெரியுமா?
விக்ரம்
பொன்னியின் செல்வன், கோப்ரா திரைப்படங்களை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சீயான் 61.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் 18-19 நூற்றாண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது. கே.ஜி.எப் குறித்த மக்களின் திரைப்படமாக இருக்கும் என இயக்குநர் தெரிவித்து இருந்தார்.

சீயான் 61
மேலும் இப்படத்தின் படபிடிப்புகாக பல இடங்களை தேடிய இயக்குநர் தற்போது ஆந்திராவில் உள்ள கடப்பா பகுதியில் ஷூட்டிங்கை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் பசுபதியும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் - பசுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கி வருவதாகவும், கடப்பாவில் தொடர்ந்து பத்து நாட்கள் ஷூட்டிங் நடக்கும் எனவும் தகவல் வந்துள்ளது.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனனை நடிக்க வைக்க பரீசிலீத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri