விஜய் டிவியின் சூப்பர் சீரியலின் 3வது சீசன் மீண்டும் வருகிறது... எப்போது தொடங்குகிறது தெரியுமா?
விஜய் டிவி
விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு தான் பிரபலம். ஆனால் இந்த டிவியில் ஷோக்களை தாண்டி சீரியல்களும் மக்களிடம் நல்ல ரீச் பெற்று வருகிறது.
சீரியல்கள் என்றாலே பெண்கள் தான் பார்ப்பார்கள் என்ற விதியை உடைத்தது விஜய் டிவி தான்.
இப்போது ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல தொடர்கள் மக்களிடம் நல்ல ஆதரவை பெற்று வருகிறது.
தற்போது இந்த டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
என்ன தொடர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு தொடரின் 3ம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது. 1, 2 பாகங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த எது என்றால் கனா காணும் காலங்கள் தொடர் தான்.
இதன் மூன்றாவது சீசன் படப்பிடிப்புகள் தற்போது தொடங்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வலம் வருகிறது.