மலையாள பொறுக்கிகள், அறிவே கிடையாது- மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து பிரபலம் கடுமையாக விமர்சனம்
மஞ்சும்மல் பாய்ஸ்
தமிழ் சினிமாவில் சமீபத்தில் எத்தனையோ படங்கள் வெளியானது.
ஆனால் அந்த படங்களை தாண்டி மலையாளத்தில் தயாரான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழகத்தில் வசூல் ராஜ்ஜியம் செய்கிறது. விமர்சனங்கள் அமோகமாக வர வசூலும் எந்த குறையும் இல்லாமல் நடக்கிறது.
கமல்ஹாசனின் குணா படத்தில் வந்த குகை போலவே தத்ரூபமாக செட் போட்டு படத்தை எடுத்துள்ளார்கள். தமிழ் சினிமா பிரபலங்கள் கமல், தனுஷ், விக்ரம் போன்றோர் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார்கள்.
ஜெயமோகன் பதிவு
தமிழக ரசிகர்கள் கொண்டாடும் மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர், மஞ்சும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது.
அதில் காட்டுவது புனைவு அல்ல. தென்னக்கத்தில் சுற்றுலா வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அதே மனநிலைதான் உள்ளது.
குடிகுடிகுடி விழுந்து கிடப்பது, அத்துமீறுவது, வேறெதிலும் ஆர்வமில்லை, எந்தப் பொது நாகரீகமும் கிடையாது. இந்த மலையாளப் பொறுக்கிகளுக்கு இன்னொரு மொழி தெரியாது.
ஆனால் அவர்கள் மொழி பிறருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்னும் தெனாவெட்டு இருக்கும் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
