வலிமை படம் பார்க்க வந்த அஜித்தின் மனைவி, மகள்- ரசிகர்கள் சொன்ன கியூட்டான விஷயம்
தமிழகம் முழுவதும் ரசிகர்கள் வலிமை படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள். எந்த இடத்தை எடுத்துக் கொண்டாலும் படத்தின் வசூலுக்கு குறையில்லை என்கின்றனர்.
படம் வெளியாகி 13 நாட்கள் ஆகிவிட்டன, எந்த ஒரு படமும் வெளியாகாததால் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வசூல் விவரம்
வசூல் ரீதியாகவும் அஜித்திற்கு ஹிட் படம் என்றால் அது விஸ்வாசம் தான், நேர்கொண்ட பார்வைக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. இப்போது வலிமை படத்திற்கு நல்ல விமர்சனத்துடன் வசூலும் குறையில்லாமல் உள்ளது. படம் வெளியான 10 நாட்களில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்தில் உள்ள இன்னொரு சிறப்பான விஷயம் என்றால் அஜித்தின் திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என வெளியான முதல் பான் இந்திய திரைப்படம் இதுதான்.
திரையரங்கில் அஜித் குடும்பம்
ரசிகர்களை போல நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அவரது படத்தை திரையரங்கில் பார்ப்பது வழக்கம். சில படங்களுக்கு ஷாலினி முதல் நாள் முதல் ஷோ ரசிகர்களுடன் இணைந்து பார்ப்பார். இந்த வலிமை படத்தையும் ஷாலினி தனது குடும்பத்துடன் திரையரங்கில் வந்து பார்த்துள்ளார்.
ரசிகரின் வேண்டுகோள்
படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ஷாலினிடம் ஒரு ரசிகர், ஹாய் மேடம் அஜித் சாரை கேட்டதாக கூறுங்கள் என கூறுகிறார். அந்த வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு,
Fan Boy Tell To Shalini Mam❤️
— Aᴊɪᴛʜʏᴀɴ Dɪɴᴜ (@ak_dinu) March 8, 2022
"Hii Madam Ajith Sir Ah Kettanu Sollunga"?✨#Valimai #Ajithkumar #Ak61 pic.twitter.com/ragsEWD8ha
அஜித்தின் வலிமை திரைப்படம் இந்த ஒரு இடத்தில் படு தோல்வியா?- ரசிகர்கள் ஷாக்