விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித்துக்கு பரிசு கொடுத்த ரசிகர்.. அப்படி அது என்ன பரிசு தெரியுமா
அஜித் - விடாமுயற்சி
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
அசர்பைஜானில் நடைபெற்று வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ரசிகர் கொடுத்த பரிசு
அங்குள்ள ரசிகர்கள் அஜித்தை நேரில் சந்தித்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிறது.
அந்த வகையில் ரசிகர் ஒருவர் நடிகர் அஜித்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி அஜித்தை வரைந்து அதை அவருக்கு பரிசாகவும் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..