சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலின் வரும் வாரம் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ரோகிணியின் முன்னாள் கணவர் மற்றும் மகன் கிரிஷ் பற்றிய உண்மை மீனாவிற்கு தெரியவந்தும், அவரால் அந்த உண்மையை குடும்பத்தினரிடம் சொல்ல முடியவில்லை. இதனால், மனவேதனையில் தவித்து கொண்டிருக்கிறார் மீனா.

இந்த சமயத்தில் வீட்டில் வேண்டுமென்றே சண்டை போட்டுவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிவிடலாம் என முடிவு செய்கிறார் மீனா. இதனால், தனது கணவர் முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார் என வேண்டுமென்றே அவரிடம் சண்டை போடுகிறார்.
நிலாவை கடுப்பேற்ற வேறொரு பெண்ணை காதலித்த சோழன்.. ஆனால், காத்திருந்த அதிர்ச்சி! அய்யனார் துணை சீரியல் புரோமோ
கடும் கோபத்தில் ரசிகர்கள்
இதன்பின் தனது அம்மா வீட்டிற்கு கிளம்பும் மீனாவிடம் ஏன் வீட்டை விட்டு கிளம்புற என அண்ணாமலை கேட்கிறார். ஆனால், அவரால் உண்மையை சொல்ல முடியவில்லை. அவர் உண்மையை கூறுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனால், இந்த புரோமோ வீடியோ வெளிவந்தவுடன், சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர். மீனாவை ஏன் இவ்வளவு டம்மியாக காட்டுறீங்க என கடுப்பாகி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.