குக் வித் கோமாளி ஷிவாங்கி குரலை மிமிக்ரி செய்யச்சொன்ன ரசிகர்கள்- அப்படியே அவரை போலவே பேசிய விஜய் டிவி பிரபலம், வீடியோ
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அதிக பேமஸ் ஆகிவிட்டார் ஷிவாங்கி. இந்நிகழ்ச்சியில் இவர் அஸ்வின் மற்றும் புகழுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ஏராளம்.
அதை ரசிகர்கள் அதிகம் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமூக வலைதளங்களில் வந்தாலே ஷிவாங்க-அஸ்வின் புகைப்படங்கள் டிரண்ட் ஆவதை காணலாம்.
ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கிய ஷிவாங்கிக்கு காலேஜ் மாணவர்கள் மத்தியில் அதிக கிரேஸ் உள்ளது.
அண்மையில் விஜய் டிவி பிரபலங்களான பாலா மற்றும் குரேஷி ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் ஷிவாங்கி குரலில் பேச சொல்லி அங்கிருப்பவர்கள் கேட்டுள்ளனர்.
உடனே பாலா மற்றும் குரேஷி இருவரும் ஷிவாங்கி குரலில் பேசி அசத்தியுள்ளனர். அந்த வீடியோவையும் குரேஷி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.