வாரிசு படம் பார்க்க திரையரங்கின் கதவை உடைத்து உள்ளே வந்த ரசிகர்கள்- பரபரப்பான வீடியோ
விஜய்யின் வாரிசு
தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் இணைந்து விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படம் இன்று படு மாஸாக 4 மணி ஸ்பெஷல் ஷோவுடன் தொடங்கியுள்ளது.
பல நாள் கனவாக ரசிகர்கள் இப்படத்தை காண காத்துக் கொண்டிருக்க அந்த நாள் வந்ததும் அவர்களை கட்டுப்படுத்ததே முடியவில்லை.
கொண்டாட்டங்கள் எல்லாம் படு மாஸாக இருக்கிறது, வாரிசு படத்தையும் ரசிகர்கள் பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

உடைந்த கதவு
ரோஹினி திரையரங்கம் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு ஏற்ற ஒரு திரையரங்காக உள்ளது.
வாரிசு அல்லது துணிவு படத்திற்காகவா தெரியவில்லை, திரையரங்க உரிமையாளர்கள் கதவை இழுத்து மூட ரசிகர்களோ கதவை உடைத்து திரையரங்கிற்குள் நுழைகிறார்கள்.
அந்த வீடியோ வெளியாகி ரசிகர்களின் ஆவேசத்தை காட்டுகிறது.
? @RohiniSilverScr pic.twitter.com/Vr1q8hfBO7
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 10, 2023