ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டில் TVK TVK என கத்திய ரசிகர்கள்... விஜய் செய்த விஷயம்
ஜனநாயகன்
சினிமாவில் இருந்து விலகி நடிகர் விஜய் 2026ல் தேர்தல் களத்தை சந்திக்க உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அடுத்தடுத்து அதற்கான வேலைகளை இறங்கியுள்ளார்.
இதற்கு இடையில் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப்படமான ஜனநாயகன் திரைப்படம் 2026, ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் அரசியலை மையப்படுத்திய கதை எனப்படுகிறது, அதற்கு ஏற்றார் போல் பாடல்களும் உள்ளது.

இன்று படு மாஸாக விஜய்யின் ஜனநாயகன் ஆடியோ வெளியீடு மலேசியாவில் நடக்கிறது.
TVK விஜய்
மலேசியாவில் நடக்கும் ஆடியோ வெளியீட்டு விழாவில் கட்சி பற்றி எதுவும் பேசக்கூடாது, கட்சிக் கொடி போன்றவற்றை எதுவும் இருக்கக் கூடாது என மலேசியா அரசு கண்டிஷன் போட்டனர்.
அரங்கில் ஒரு ரசிகர் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி காட்ட அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அரங்கத்தில் ரசிகர்கள் TVK TVK என கோஷம் போட விஜய் கியூட்டாக கை அசையில் இங்கே வேண்டாம் என கூறுகிறார்.
