செல்பி எடுப்பதற்காக நடிகர் விஜயை வீடு வரை துரத்தி சென்ற ரசிகர்கள், அதற்கு அவர் என்ன செய்துள்ளார் பாருங்க
தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.
இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு ஆரம்பித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்கள் தங்களின் வாக்குப்பதிவை செய்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி,கமல், அஜித், சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வாக்குப்பதிவு செய்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்த சைக்கிளில் புறப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பின்னர் வீட்டிற்கு திரும்பி சென்ற நடிகர் விஜய் ரசிகர் ஒருவரின் வண்டியில் சென்றுள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முயற்சித்துள்ளனர். இதனால் விஜய் அவர்களை மெதுவாக தட்டி விட்டு பின் வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.
இதோ அந்த வீடியோ.
Selfie with Thalapathy! ? pic.twitter.com/4UlrSkNMLD
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 6, 2021
இரத்த சர்க்கரை முதல் சரும ஆரோக்கியம் வரை.., தினமும் காலையில் ஒரு கப் இந்த தண்ணீர் போதும் News Lankasri
அக்டோபர் மாதத்தில் அதிர்ஷ்டத்தை பெறும் 7 ராசியினர்.... உச்சத்தில் இருக்கும் குருவினால் பணமழை Manithan