மரியாதை தெரியாத மோசமான பெண் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனா- ரசிகரின் மோசமான கமெண்ட்
விஜய் தொலைக்காட்சியில் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே வைத்து பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் பாரதி கண்ணம்மா.
இயக்குனரும் ஏதேதோ விஷயங்களை உள்ளே புகுத்தி உண்மையை மட்டும் வெளியே கொண்டுவந்துவிட கூடாது என்று இருக்கிறார். இதில் டுவிஸ்ட் வேறு வைக்கிறேன் என வார நாட்களில் அதை நோக்கியே கதையை தள்ளிவிட்டு இறுதியில் மொக்கையாக்குகிறார்.
இதை பார்த்து பார்த்து ரசிகர்கள் வெறுத்து ஒன்று சீரியலை முடித்துவிடுங்கள், இல்லை உண்மையை நோக்கி கதையை பயணம் செய்யுங்கள் என கமெண்ட் செய்கின்றனர்.
இதில் வில்லியாக நடிக்கும் வெண்பா என்கிற பரீனா இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார். அவர் தனது இன்ஸ்டாவில் ஒரு பாடலுக்கு ரியாக்ஷன் செய்து வீடியோ வெளியிட்டார்.
அதைப்பார்த்த ரசிகர் ஒருவர் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உங்களது குழந்தையுடன் இருங்கள் என கமெண்ட் போட, அதற்கு பரீனா, நீங்கள் வருத்தப்படுவதை நிறுத்துங்கள் அவன் எப்போதும் என்னுடை தான் இருக்கிறான் என கமெண்ட் செய்திருக்கிறார்.
அவரின் அந்த பதிவுக்கு மற்றொரு ரசிகர், இவருக்கு கமெண்ட் செய்வதை நிறுத்துங்கள், இவரது அக்கவுண்டை பிளாக் செய்யுங்கள். மரியாதை தெரியாத மோசமான பெண் இவர் என்று பதிவு செய்துள்ளார்.