விஜய் டிவியில் யாரடி நீ மோஹினி சீரியலா..? தீடீரென சூப்பர்ஹிட் சீரியலை கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்
விஜய் டிவியில் தற்போது சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று செந்தூரப்பூவே. இதில் முதல் முறையாக வெள்ளித்திரை நடிகர் ரஞ்சித், ஹீரோவாக நடித்து வருகிறார்.
மேலும் சமீபத்தில், அவரது மனைவி நடிகை பிரியா ராமனும், கதைப்படி இறந்துபோன அருணா எனும் கதாபாத்திரத்தில் பிளாஷ் பேக் காட்சியில் நடித்து, செந்தூரப்பூவே சீரியலில் என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில், இன்று செந்தூரப்பூவே சீரியலில் இருந்து ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் கதாநாயகி ரோஜாவை கொலை செய்வதற்கு அடியாட்களை செட் செய்துள்ளார் வில்லன் ராஜேந்திரன்.
ரோஜாவை அரிவாளால் வெட்ட, அடியாள் கையை தூக்கும் பொழுது, ரோஜாவின் முகத்தில் அருணா தெரிகிறார். இதனை பார்த்து ராஜேந்திரன் பயந்துவிடுகிறார். அப்போது அருணா, இனி உங்களை பலி வாங்குவது தான் என்னுடைய வேலை என கூறுகிறார்.
இந்த ப்ரோமோவை பார்த்த, ரசிகர்கள் பலரும், 'என்னடா இது, யாரடி நீ மோஹினி சீரியல ஓட்டுறீங்க' என கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் சீரியலை மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இனிமே ரோஜாவே ஒன்னும் பண்ண முடியாது .!?
— Vijay Television (@vijaytelevision) August 6, 2021
செந்தூரப்பூவே - இன்று இரவு 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #SenthooraPoove #VijayTelevision pic.twitter.com/clnQnCIyRq