நடிகர் புனித் ராஜ்குமார் மரண செய்தி கேட்டு உயிரிழந்த ரசிகர்கள்- இப்படி ஒரு சோகமா, இத்தனை ரசிகர்கள் இறந்தார்களா?
கன்னட திரையுலகமே கடும் சோகத்தில் மூழ்கி இருக்கிறது. காரணம் நடிகர் புனித் ராஜ்குமார், வயது 46 திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
காலையில் புதிதாக ரிலீஸ் ஆகும் தனது அண்ணன் படக்குழுவினருக்கு வாழ்த்து கூறி டுவிட் செய்திருக்கிறார். பின் வழக்கம் போல் ஜிம் சென்று உடற் பயிற்சி செய்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவர் 2.30 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார், 2.45 மணிக்கு எல்லாம் அவரது கண் தானம் செய்யப்பட்டுள்ளது.
இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது. புனித் ராஜ்குமாரின் மரண செய்தி கேட்டு ஒரு ரசிகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
இன்னும் இரண்டு ரசிகர்கள் செய்தி கேட்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவ கன்னட ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.