இயக்குனர் செல்வராகவன் நடித்த முதல் படம்.. எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்?
காதல் கொண்டேன், 7ஜி ரயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என பல கல்ட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன்.
இவர் தற்போது கீர்த்தி சுரேஷுடன் இணைந்து முதல் முறையாக சாணி காயிதம் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை, புகைப்படத்துடன் படக்குழு அறிவித்தது. அத்துடன் இணைந்து இப்படத்தின் டப்பிங் வேலைகளும் நடந்து வருகிறது.
செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாகும் படங்களை ரசிகர்கள் வெறித்தமாக கொண்டாடுவார்கள். அதைவிட தற்போது அவர் நடித்துள்ள படத்தை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில், செல்வராகவன் முதன் முதலாக நடித்துள்ள இப்படம், நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாக சில தகவல் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து, இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
இயக்குனர் செல்வராகவன் அடுத்ததாக, தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: ஆட்டம் போட்ட திவ்யா, சாண்ட்ராவிற்கு கிடைத்த முத்திரை... சுயரூபத்தை காட்ட ஆரம்பித்த போட்டியாளர்கள் Manithan
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri