சன் டிவியில் கணவன், ஜீ தமிழில் மனைவி என நடிக்கும் ரியல் சீரியல் ஜோடிகள்... யாரெல்லாம் பாருங்க
சீரியல் ஜோடி
சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் தான் இப்போது ரசிகர்களிடம் அதிக பேச்சாக உள்ளது.
சன் டிவி எடுத்தால் சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் தொடர்கிறது, மருமகள் என அடுத்தடுத்து ஹிட் தொடர்களை கூறலாம்.
விஜய் டிவியை எடுத்தால் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள், மகாநதி, சிந்துபைரவி போன்று தொடர்கள் ஹிட்டாக ஓடுகிறது.
அதேபோல் ஜீ தமிழில் ஹிட் தொடர்கள் என்றால் கார்த்திகை தீபம், அண்ணா, கெட்டி மேளம், இதயம் போன்று அடுத்தடுத்து சீரியல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
ரியல் ஜோடி
இப்படி சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாக ஒரு சுவாரஸ்யமான தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது ரியல் ஜோடியாக இருக்கும் சீரியல் நடிகர்கள் இப்போது சன் டிவியில் கணவனும் ஜீ தமிழில் மனைவியும் நடிக்கும் ஒரு Coincidence தகவல் குறித்து தான் பார்க்கப்போகிறோம்.
சஞ்சீவ்-ஆல்யா சஞ்சீவ் சன் டிவியில் கயல் சீரியல் நடிக்க ஜீ தமிழில் ஆல்யா மானசா பாரிஜாதம் தொடரில் நடிக்கிறார்.

கிருஷ்ணா-சாயா சிங் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வினோதினி சீரியலில் கிருஷ்ணா நடிக்க சாயா சிங் ஜீ தமிழில் கெட்டி மேளம் சீரியலில் நடிக்கிறார்.

சல்மானுள்-மேகா ஆடுகளம் சீரியலில் சல்மானுள் நாயகனாக நடிக்க மேகா ஜீ தமிழில் திருமாங்கல்யம் சீரியலில் நடிக்கிறார்.

அமல்ஜித்-பவித்ரா சிங்கப்பெண்ணே சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் அமல்ஜித் நாயகனாக நடிக்கிறார், விரைவில் ரியல் ஜோடியாகப்போகும் பவித்ரா ஜீ தமிழில் புதிய சீரியல் நடிக்கப்போகிறார்.
