மாஸ்டர் பட டிக்கெட்டுகளை விதியை மீறாமல் வரிசையில் நின்று வாங்கிய ரசிகர்கள்..! புகைப்படத்துடன் இதோ..
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
மாஸ்டர் படத்தின் டிக்கெட் முன்பதிவு உலகம் முழுவதும் நடந்து வருகிறது, படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகள் செய்து வருகிறது.
மேலும் நேற்று இப்படத்தில் இருந்து ஒரு சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த செயலில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் முன்பதிவு ஆரம்பித்துள்ள நிலையில், இப்படத்தின் டிக்கெட்டுகளை விதிகளை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் கூட்டமாக டிக்கெட் வாங்கிய புகைப்படங்கள் வெளியாகி வந்தது.
ஆனால் கேரளாவில் திரிசூர் என்ற இடத்தில் போலீஸின் கண்காணிப்போடு ரசிகர்கள் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை பெற்றுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.