தற்கொலை செய்துகொண்ட கணவருக்காக பாவனி இப்படி ஒரு விஷயம் செய்திருக்கிறாரா?- எத்தனை பேர் கவனித்தீர்கள்?
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அத்தனை போட்டியாளர்களும் தங்களது வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயங்கள் பற்றி பேசினார்கள்.
சிலர் வாழ்க்கை பயணத்தை கேட்கும் போது போட்டியாளர்களை தாண்டி மக்களும் தேம்பி தேம்பி அழுதிருக்கின்றனர். அப்படி பாவனியின் வாழ்க்கையும் மக்களுக்கு கடும் சோகத்தை கொடுத்தது.
பிரதீப் என்ற நடிகரை காதலித்து சந்தோஷமாக திருமணமும் செய்துள்ளார். ஆனால் திருமணமான 8வது மாதத்தில் பிரதீப் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
அந்த 8 மாதத்தில் பாவனியை குழந்தை போல் நன்றாக பார்த்துக் கொண்டாராம், திடீரென அவர் ஏன் அப்படி செய்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
கணவர் இறந்ததும் அவரை பற்றிய நினைவுகளை அழித்துவிட்டு வாழும் சிலருக்கு மத்தியில் பாவனி அவரை மட்டுமே நினைத்து வாழ்ந்து வருகிறார்.
அதற்கு உதாரணமாக பிரதீப் என்று தனது கணவரின் பெயரை கையில் பச்சை குத்தியுள்ளார். அதை அழிக்கும் வாய்ப்பு இருந்தும், அப்படியே வைத்துள்ளார், அதைப்பார்த்த ரசிகர்கள் அவர் எவ்வளவு உண்மையாக தனது கணவரை நேசித்துள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.