என்னடா மதம், அந்த பக்கம் போங்கப்பா... தொகுப்பாளினி மணிமேகலை கணவர் செய்த விஷயம், வாழ்த்தும் ரசிகர்கள்
தொகுப்பாளினி
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களுக்கு பிடித்த நிறைய தொகுப்பாளினிகள் உள்ளனர். அப்படி கடந்த பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமாக இருப்பவர் மணிமேகலை.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் முதன்முறையாக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் சன் டிவி நிகழ்ச்சி பக்கமும் வந்துள்ளார்.
அந்த நேரத்தில் ஒரு பாடலில் ஒருவரை பார்த்து அவர் மீது காதல் வசப்பட அவரையே வீட்டை எதிர்த்து திருமணமும் செய்துகொண்டார்.

மணிமேகலை, ஹுசைனை காதலித்து திருமணம் செய்த கையோடு விஜய் டிவி பக்கம் வந்தார், நிறைய நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், தொகுப்பாளினியாகவும் கலக்கி வந்தார்.
பின் குக் வித் கோமாளி ஒரு சீசன் தொகுத்து வழங்கிய போது பிரச்சனை ஏற்பட தொலைக்காட்சி விட்டே சென்றார். இப்போது ஜீ தமிழில் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஐயப்பா
மணிமேகலை ஹிந்து அவரது கணவர் ஹுசைன் முஸ்லிம், இதனாலேயே தொகுப்பாளினி வீட்டில் அவரது காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால் மதத்தை தாண்டி காதல் பெரியது என்பதை இந்த ஜோடி நிரூபித்துள்ளார்கள். அவர்கள் இப்போது செய்துவரும் காரியம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
மணிமேகலை-ஹுசைன் இருவரும் இருவரின் தெய்வங்களை கும்பிட்டு வந்த நிலையில் ஹுசைன் தற்போது சபரி மலைக்கு மாலை போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் மதங்களை கடந்த காதல் என பாராட்டி வருகிறார்கள்.
