அஜித்தின் வலிமை படத்தை பெரிய தொகைக்கு வாங்க கேட்ட OTT- இத்தனை கோடியா, ஆனால்?

ajith valimai ott postponed boneykapoor hvinodh
By Yathrika Jan 08, 2022 05:50 AM GMT
Report

2022ம் ஆண்டு வந்ததுமே சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருந்தார்கள் அஜித் ரசிகர்கள். ஆனால் அவர்களின் மகிழ்ச்சியை அப்படியே குறைத்துவிட்டது ஒரு தகவல்.

கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகமாக இந்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதிலும் தமிழக அரசு நாளுக்கு நாள் 4,5 ஆயிரம் என டபுள் மடங்காக உயர மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட கூறியுள்ளனர்.

அப்படி படங்களை திரையிடும் திரையரங்குகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் வலிமை திரைப்பட ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது.

திரையரங்க ரிலீஸ் தள்ளிப்போகவே பெரிய OTT தளங்கள் வலிமை படக்குழுவை அணுகியுள்ளனர். ரூ. 300 கோடிக்கு எல்லாம் படத்தை வாங்க பெரிய நிறுவனங்கள் எல்லாம் கேட்ட நிலையில் எல்லாவற்றிற்கும் மறுப்பு தெரிவித்துள்ளது வலிமை படக்குழு.

படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிடுவோம் என்று உறுதியாகவுள்ளனர். அவர்களின் இந்த செயலை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US