விஜய் டிவி பிரபலத்தை காதலிக்கிறாரா நடிகை அம்மு அபிராமி- வைரலாகும் போட்டோ
அம்மு அபிராமி
தமிழ் சினிமாவில் ராட்சசன், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி.
இவர் கடந்த 2022ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு 3வது இடத்தை பிடித்தார்.
அண்மையில் அம்மு அபிராமி தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் வெளியிட ஒரு விஷயம் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
வைரல் போட்டோ
அம்மு அபிராமி பிறந்தநாளை கொண்டாடிய போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபன் ஒரு அழகிய பதிவு போட்டார்.
அதில் அவர், பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிராமி, எப்போதும் சந்தோஷமாக இரு, உன்னை போன்ற இனிமையான ஆன்மாவுக்கு புன்னகை நிறைந்த பலர் வாழ்த்துவார்கள் என்று கூறியுள்ளார்.
இதற்கு அபிராமியும் நன்றி என பதில் அளித்துள்ளார். இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் பிறந்தநாள் வாழ்த்தை எல்லாம் பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
