தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர்
சன் டிவி
சன் தொலைக்காட்சி என்றாலே முதலில் அனைவருக்கும் நியாபகம் வருவது சீரியல்கள் தான்.
காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை இடையில் 3 மணிநேரம் மட்டுமே படம் ஒளிபரப்பாகும்.
சிங்கப்பெண்ணே தொடங்கி மூன்று முடிச்சு, கயல், மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது போன்ற தொடர்கள் ஆர்பியின் உச்சத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
முடிங்கடா
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடரை முடிங்கடா என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
அதுஎன்ன தொடர் என்றால் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி நடிக்கும் கயல் சீரியல் தான்.
தொடரில் எப்போதுமே ஒரு பிரச்சனை அதை நாயகி தீர்த்து வைக்கிறார், எப்போது புரொமோ வந்தாலும் இதனை எப்படி சரி செய்வேன், அந்த பிரச்சனைக்கு என்ன தான் முடிவு, உண்மையை கண்டுபிடிப்பேனா இப்படியே காட்டப்படும்.
இந்த நிலையில் பொறுமையை இழந்த ரசிகர்கள் எப்படா கயல் சீரியலை முடிப்பீர்கள், முடியலடா என சீரியல் புரொமோ கீழ் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.