அன்று செருப்பு வீச்சு.. இன்று மீண்டும் கூட்டத்தில் இருந்து விஜய் மீது வீசப்பட்ட விஷயம்.. வைரல் வீடியோ..
GOAT
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் GOAT. இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு விஜய்யை காண பெரும் ரசிகர்கள் கூட்டம் கூடியது. அப்போது ரசிகர்களை சந்தித்த விஜய், வேன் மீது ஏறி செல்பி எடுத்தார்.

அங்கிருந்த ரசிகர்கள் சிலர் விஜய் மீது பூக்களை தூவினார்கள். இன்னும் சில மாலை கூட போட வந்துள்ளனர். ஆனால், அதை செய்யமுடியாத நிலையில், மாலையை விஜய் பக்கம் தூக்கி வீசினார்கள்.
ரசிகர்களின் அன்பு பரிசு
அந்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது, நடிகர் விஜய் மீது கூட்டத்தில் இருந்து செருப்பு வீசப்பட்டது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அன்று செருப்பு வீச்சு, இன்று விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அன்பு மாலை என கூறி இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
#TheGOATshootingdiaries pic.twitter.com/P9t1BXhpze
— venkat prabhu (@vp_offl) January 13, 2024