கண்டவன் வீட்டுக்குள்ள உங்க மனைவியை செய்ய சொன்னா செய்வீங்களா?- Hijab பிரச்சனை குறித்து பரீனா அதிரடி
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் இவ்வளவு வருடங்கள் ஒளிபரப்பாவது வெண்பா என்ற ஒரேஒரு கதாபாத்திரத்தால் தான்.
அவர் செய்த சூழ்ச்சி இன்னமும் சீரியலில் முடியா பிரச்சனையாக இருக்கிறது. வெண்பா என்கிற பரீனா முஸ்லீம் மதத்தை சார்ந்தவர், இதனாலேயே அவரிடம் பலர் கர்நாடகாவில் நடக்கும் Hijab பிரச்சனை குறித்து கேள்வி கேட்கின்றனர்.
அப்படி ஒரு ரசிகர் இந்த பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர், ஹிஜாப் போட்றதோ போட்டு வைக்கறதோ ஒருத்தவங்களோட தனிப்பட்ட விருப்பம். கண்டவர்கள் எல்லாம் உங்கள் வீட்டிற்குள் வந்து உங்கள் மனைவியிடம் வேலை செய்ய கட்டளை போட யாராலும் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.