விஜய் டிவி மீது அதிருப்தியில் ஃபரினா.. குக் வித் கோமாளி பற்றி கோபமாக வெளியிட்ட வீடியோ
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு சமீபத்தில் தொடங்கியது. செஃப் வெங்கடேஷ் பட் வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜை நடுவராக விஜய் டிவி கொண்டு வந்திருக்கிறது.
பழைய கோமாளிகள் உடன் புது கோமாளிகளும் பல பேர் ஷோவில் இணைந்து இருக்கின்றனர்.
விலகும் ஃபரினா?
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து புகழ்பெற்ற ஃபரினா அசாத் தற்போது கோமாளியாக வந்திருக்கிறார்.
அந்த வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியாக இருந்தாராம், ஆனால் அவரது காட்சிகளை எடிட்டர் வெட்டிவிடுவதால் தனக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என கோபமாக அவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதனால் அவர் ஷோவில் இருந்து விலகுகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
