கணவர் செய்த செயலால் கதறி அழுத பாரதி கண்ணம்மா நடிகை ஃபரினா
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா ரோலில் நடித்து வருகிறார் ஃபரினா அசாத். அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பாரதி கண்ணம்மாவில் நடிப்பதில் இருந்து அவர் இடைவெளி எடுத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
வழக்கம்போல அவர் வெண்பாவாக வில்லத்தனமாக நடித்து வரும் நிலையில் தற்போது விஜய் டிவியின் புது ஷோ "சம்சாரம் அது மின்சாரம்" நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். அதில் மைனா நந்தினி - யோகேஸ்வர், மணிமேகலை - ஹுசைன் போன்றோருடன் பாலாவும் கலந்துகொண்டிருக்கிறார்.
அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் அட்ராசிட்டி செய்கின்றனர். கணவன் மனைவிக்கு பணிவிடைகள் செய்வது போல முதலில் காட்டப்பட்டு அதன் பிறகு அவர்கள் காமெடியாக பல விஷயங்கள் செய்வதும் காட்டப்பட்டு இருக்கிறது.
ஃபரினாவின் கணவர் அவருக்கு பிடித்த சேலை ஒன்றை எடுத்து அதன் மீது காபியை ஊற்றிவிடுகிறார். அதனால் ஃபரினா கதறி கதறி அழுகிறார். அதன் ப்ரோமோ வீடியோ தற்போது வெளிவந்திருக்கிறது இதோ..
வேற லெவல் atrocity-யால இருக்கு இது.. ?
— Vijay Television (@vijaytelevision) January 2, 2022
சம்சாரம் அது மின்சாரம் - இன்று மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில..#SamsaaramAdhuMinsaaram pic.twitter.com/4o7Q5JwB0X