வேறு டிவிக்கு தாவிய பாரதி கண்ணம்மா ஃபரீனா! வைரல் போட்டோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மாவில் வில்லி வெண்பா ரோலில் நடித்து வருகிறார் ஃபரினா ஆசாத். அவர் பிரசவத்திற்கு பிறகு தற்போது தான் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று ஃபரினா பாவாடை தாவணியில் இருக்கும் போட்டோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. அவர் சின்ன பெண் போல இருக்கிறார் என நெட்டிசன்களும் கமெண்டில் கூறி வந்தனர். அந்த புகைப்படம் அவர் கலைஞர் டிவியில் ஒரு ஷோவினை தொகுத்து வழங்கியபோது எடுத்த புகைப்படம் தான்.
அஸ்வின் நடித்து இருக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் ஸ்பெஷல் ஷோ தான் அது. பாரதி கண்ணம்மாவில் நடிக்கும் முன்பு ஃபரினா சன் டிவி உட்பட சில சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். அவர் தற்போது மீண்டும் கலைஞர் டிவிக்கு தாவி இருப்பது ரசிகர்களுக்கு சற்று ஆச்சர்யமான தகவல் தான்.