9வது மாத கர்ப்ப காலத்தில் சீரியலுக்காக இப்படி ஒரு காட்சி நடித்தாரா வெண்பா- பாரதி கண்ணமா சீரியலில் நடந்த நிஜ விஷயம்
விஜய்யின் பெரிய ஹிட் சீரியலாக உள்ளது பாரதி கண்ணம்மா. ஒரே ஒரு DNA டெஸ்ட் எடுத்தால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும், சீரியல் முடிய கூடாது என்பதற்காக இயக்குனர் பல வில்லத்தனம் செய்து கதையை நகர்த்தி வருகிறார்.
கண்ணம்மாவிற்கு ஹேமா தான் தனது இன்னொரு மகள் என பல நாள் ரகசியம் தெரிய வருகிறது, இன்றும் கண்ணம்மா-சௌந்தர்யா காட்சிகள் தான் இடம்பெற இருக்கின்றன.
சீரியல் முடியும் போது கடைசியில் சௌந்தர்யா, வெண்பாவை துப்பாக்கியால் சுட்டு கொள்வது போல் காட்சி இருக்கும்.
அந்த காட்சி குறித்து பரீனா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், 9வது மாத கர்ப்ப காலத்தில் அதிரடி காட்சிகள் நடித்தேன், எனக்கே என்னை பார்த்தால் பெருமையாக இருக்கிறது.
அது நிஜ துப்பாக்கி, அதற்கான லைசன்ஸ் வைத்திருப்பவரின் உதவியுடன் புல்லட் இல்லாமல் ஸ்பார்க் மற்றும் புகையை வரவைப்பது போல் காட்சி எடுத்தோம் என பதிவு செய்துள்ளார்.