மாதம்பட்டி ரங்கராஜை மறுமணம் செய்த ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் யார் தெரியுமா?... போட்டோவுடன் இதோ
மாதம்பட்டி ரங்கராஜ்
சினிமா பிரபலங்கள் நடிப்பதை தாண்டி தங்களுக்கு விருப்பமான, பிடித்த துறையில் கலக்குகிறார்கள்.
அப்படி சமையல் கலையில் புகழ்பெற்றவராக கலக்கி வருபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். எந்த பிரபலத்தின் வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான்.
தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவரை மறுமணம் செய்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாக செம வைரலானது.
முதல் கணவர்
விஜய்யின் ஜில்லா, ரவி மோகனின் மிருதன், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருப்பவர் ஜாய்.
இவர் கடந்த 2018ம் ஆண்டு ஜே ஜே ப்ரெட்டிக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஆண் குழந்தையும் உள்ளது.
திருமணம் ஆன 5 ஆண்டுகளில் அதாவது கடந்த 2023ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர். ஜே ஜே ப்ரெட்ரிக் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கி உள்ளார். இதோ ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் போட்டோ,