பிரம்மாண்ட வசூல் மழையில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9, இதுவரை எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா?
ஹாலிவுட் திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்பட சீரிஸ் என்றால் அது பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படங்களாக தான் இருக்க முடியும்.
இதுவரை பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படங்களின் 8 பாகங்கள் வெளியாகியுள்ளது. இவை அனைத்துமே உலக ரசிகர்கள் அனைவரும் கவர்ந்துள்ளது.
கடைசியாக உருவாகியுள்ள பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9 திரைப்படம் பல நாட்களுக்கு முன்பே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படம் மே 19 ஆம் தேதி ஹாங் காங் மற்றும் சவுத் கொரியாவில் மட்டும் வெளியாகி உள்ளது. பின் வரும் நாட்களில் உலகம் முழுவதும் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் தற்போது பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9 திரைப்படம் இரண்டு வாரங்களில் 1500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.