சம்பளம் எல்லாம் கொடுத்தாச்சு... லியோ டான்சர்கள் சர்ச்சைக்கு FEFSI தலைவர் செல்வமணி பதில்
லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் படத்தைப்பற்றி வந்துகொண்டிருக்கிறது. இசை வெளியீட்டு விழா ரத்து ஆனது ஒருபக்கம்,அதன் பின் வந்த லியோ ட்ரைலரில் விஜய் கேட்ட வார்த்தை பேசி இருந்த சர்ச்சை இன்னொரு பக்கம் என பரபரப்பாக சர்ச்சைகள் இருந்து வருகிறது.
சர்ச்சை
லியோ படத்தின் 'நான் ரெடி தான் வரவா' பாடலில் விஜய் பல ஆயிரம் டான்சர்கள் நடுவில் நடனம் ஆடி இருக்கிறார். அந்த பாடலுக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்து பெரிய ஹிட் ஆகி இருக்கிறது.
இந்த பாடலில் டான்ஸ் ஆட பேசப்பட்ட சம்பளத்தை கொடுக்கவில்லை என சில தினங்களுக்கு முன் டான்சர்கள் சிலர் கூட்டமாக சென்று போலீஸில் புகார் கொடுத்திருந்தனர். தங்களுக்கு சாப்பாடு கூட சரியாக போடவில்லை என புகார் கூறினார்கள்.

RK செல்வமணி விளக்கம்
இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி FEFSI சங்க தலைவர் RK செல்வமணி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். சங்கம் மூலமாக வந்தவர்களுக்கான சம்பளம் சங்கத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.
சங்கத்தில் இல்லாதவர்கள் சம்பளம் அவர்களது வங்கி கணக்கிற்கு முழுமையாக அனுப்பிவைக்கப்பட்டுவிட்டது என தெரிவித்து இருக்கிறார்.
முழு அறிக்கை இதோ

ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri