தயாரிப்பாளரை நினைத்தால் தான்.. ஜனநாயகன் சர்ச்சை பற்றி முதல்முறையாக பேசிய விஜய்
விஜய்யின் ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கிலும் படக்குழுவுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. அடுத்து உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் வழக்கு தொடரலாம் என்பதால் சென்சார் போர்டு நேற்றே கேவியட் மனு தாக்கல் செய்து இருக்கிறது.

விஜய் பேட்டி
இந்நிலையில் விஜய் ஜனநாயகன் சர்ச்சை பற்றி முதல்முறையாக ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார்.
"தயாரிப்பாளரை நினைத்தால் தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் அரசியலில் நுழைவதால், என்னை குறிவைத்து, இதுபோல் எதாவது நடக்கும் என நான் எதிர்பார்த்தேன். அதற்கு mentally தயாராகவும் இருந்தேன்" என விஜய் கூறி இருக்கிறார்.

கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri