மாஸ்டர் விஜய்க்காக இப்படி ஒரு வெறித்தனமாக செயலா! வாய் பிளக்க வைத்த பெண்! புகைப்படம் இதோ!
கொரோனா சிக்கல்களுக்கு இடையிலும் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக கடந்த ஜனவரி 13 ம் தியேட்டரில் மாஸ்டர் படம் வெளியானது. சினிமா வட்டாரமும் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு கொண்டது.
ஆனால் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இருந்த போதிலும் மாஸ்டர் படம் ரூ 220 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கு தியேட்டரில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலை.
அதே வேளையில் கொரோனா காரணமாக வெளிநாடுகளில் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண்ணும் விஜய் ரசிகையுமான ஆஷ்லினா மாஸ்டர் படம் பார்ப்பதற்காகவே குடும்பத்துடன் சென்னை வந்துள்ளார்.
சென்னையை பூர்வீகமாக கொண்ட அவர் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் சென்னை அண்ணா சாலையில் உள்ள தியேட்டரில் ஒட்டு மொத்த இருக்கைகளையும் புக் செய்து தன் குடும்பம் உறவினர்கள் என அனைவருடன் படம் பார்த்து மகிழ்ந்துள்ளாராம்.
