இயக்குநர் ஜேம்ஸ் ஃபோலி
ஹாலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஃபோலி {James Foley}. இவர் 1984ம் ஆண்டு வெளிவந்த Reckless எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
பின் AAt Close Range, Who's That Girl, After Dark, My Sweet, Glengarry Glen Ross, Two Bits, The Chamber, Fear, The Corruptor, Confidence, Perfect Stranger உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த Fifty Shades Darker மற்றும் Fifty Shades Freed ஆகிய படங்களை ஜேம்ஸ் ஃபோலி தான் இயக்கியுள்ளார்.
மரணம்
இந்த நிலையில், மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் ஜேம்ஸ் ஃபோலி மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் ஹாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 71.
கடந்த சில ஆண்டுகளாக மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதனுடன் போராடி வந்த அவர் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது.