கோபத்தில் படப்பிடிப்பின் பாதியில் வெளியேறிய சரத்குமார்? காரணம் இதுதானா
சரத்குமார்
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரில் ஒருவர் சரத்குமார். வில்லன், ஹீரோ போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு தந்தையாக சரத்குமார் நடித்திருந்தார். மேலும் இவர் நடிப்பில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது.
பாதியில் வெளியேறிய சரத்குமார்
தற்போது சரத்குமார், ராகவா லாரன்ஸ் 'ருத்ரன்' என்ற படத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங்கின் போது சரத்குமார், "இரவு 11 மணிக்கு மேல் என்னால் நடிக்க முடியாது" என்று ராகவா லாரன்ஸிடம் கூறியுள்ளார்.
ஆனால் படத்தின் குறிப்பிட்ட காட்சியை அமைக்க 11 மணிக்கும் மேல் ஆகியுள்ளது. இதனால் கோபம் அடைந்த சரத்குமார் யாரிடமும் சொல்லாமல் படப்பிடிப்பின் பாதியில் சென்றுவிட்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதை கேள்வி பட்ட லாரன்ஸும் கோபத்தில் வீட்டிற்கு சென்று விட்டதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.
சீரியல் ஜோடிக்கு நிஜத்திலேயே திருமணம்! நிச்சயதார்த்த போட்டோ வைரல்

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
