சரத்குமாரின் செயலால் முகம் சுளித்த விஜய்..வாரிசு படத்தில் நடந்த சம்பவம்
வாரிசு
தமிழ் சினிமாவில் 30 வருடமாக உழைத்து திரைத்துறையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளவர் தளபதி விஜய். சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இவரின் வாரிசு திரைப்படம் வெளியானது.
ஆரம்பத்தில் இப்படத்தை குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும், இப்படம் பாக்ஸ் ஆபிசில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடித்திருந்தார். வாரிசு ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த போது சரத்குமாரின் செயல், விஜய்யை முகம் சுளிக்க வைத்துள்ளதாம்.
சரத்குமாரின் செயல்
பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி நடிகர் விஜயை வைத்து பல படங்களை தயாரித்துள்ளார். இவர் மீண்டும் விஜயை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பல முறை அவரிடம் இதை குறித்து பேச முயன்றுள்ளார். ஆனால் விஜய் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வந்ததால் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லையாம்.
இந்நிலையில் ஆர் பி சௌத்ரி, அவரின் விருப்பதை சரத்குமாரிடம் கூறியுள்ளார். அப்போது சரத்குமார் அவருக்கு உதவி செய்வதாக கூறி ஆர். பி. சௌத்ரியை விஜய்யின் ஒப்புதல் இல்லாமல் வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துள்ளார்.
கோபம் அடைந்த விஜய்
ஆர் பி சௌத்ரியின் வருகையை சற்றும் எதிரிபார்க்காத விஜய், முறையாக ஒப்புதல் வாங்காமல் வந்ததால் கோபம் அடைந்தாராம். ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் ஆர் பி சௌத்ரியிடம் சுமுகமாக பேசினாராம்.
இதற்கு காரணமான சரத்குமாரின் செயல் விஜயை முகம் சுளிக்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
90களில் கலக்கிய நடிகை ஹீரா ராஜகோபாலா இது?- விவாகரத்து பெற்று இப்போது எப்படி உள்ளார் பாருங்க

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
