இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகப்போகும் படங்கள்... என்னென்ன படங்கள்
தமிழ் சினிமாவில் ஹிட் படங்கள் எத்தனை என்றால் இப்போதெல்லாம் விரல்விட்டு எண்ணிவிடலாம்.
காரணம் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமாக இருக்கும் படங்கள் லிஸ்ட் எடுத்தால் சில படங்களே இடம் பிடிக்கின்றன. ஆனால் திரையரங்கிலும், அதையும் தாண்டி OTT தள ரிலீஸ் படங்கள் என்றால் அதிகம் வெளியாகின்றன.
வாரா வாரம் திரையரங்குளில் ரிலீஸ் ஆகும் படங்களை விட ஓடிடி தளத்தில் தான் அதிகம் ரிலீஸ் ஆகின்றன.
அப்படி இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகப்போகும் படங்களின் விவரத்தை காண்போம்.
காதலிக்க நேரமில்லை
ரவி மோகன் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான படம். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான இப்படம் கடந்த பிப்ரவரி 11ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
கோப்ரா காய் சீசன் 6
தற்காப்பு கலையான கராத்தே கலையை அடிப்படையாக கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் 6வது அத்தியாயத்தின் 3ம் பாகம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
மார்கோ
ஹனீப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் உருவாக்கப்பட்ட இப்படம் இன்று சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
தூம் தூம்
ரிஷப் சேத் இயக்கத்தில் ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா தார், புனித் வாடன் மற்றும் பலர் தயாரித்துள்ள இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
மதுரை பையனும் சென்னை பொண்ணும்
விக்னேஷ் பழனிவேல் இயக்கத்தில் சஞ்சய் தயாரித்துள்ள இந்த வெப் தொடர் மொத்தம் 25 எபிசோடுகளை கொண்டுள்ளது. இந்த தொடர் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
