விஜய்யின் கில்லி படத்தை பின்தள்ளி வசூலில் சாதனை படைத்த இந்திய படம் எது தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா
விஜய்யின் கில்லி
தரணி இயக்கத்தில் விஜய் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் கில்லி.
இன்று சினிமாவில் விஜய் நடிப்பில் பல படங்கள் வந்து கொண்டிருக்கிறது ஆனால், இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து மாஸாக வலம் வரும் படமாக கில்லி உள்ளது.
அதற்கு முக்கிய காரணம், விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்த திரிஷாவின் நடிப்பிற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
கில்லி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பிரகாஷ் ராஜின் சிறந்த நடிப்பும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரீ- ரிலீஸ்
அதற்கு சான்றாக, இந்த படத்தை சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மறு வெளியீடு செய்தது.
கில்லி படம் வெளியாகி 19 ஆண்டுகள் அடைந்த நிலையிலும் ரீரிலீஸின் போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இதன் மூலம் கில்லி திரைப்படம் மறு வெளியீட்டில் ரூ.10 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.
ஆனால், கில்லி படத்திற்கு முன்பே ரீ- ரிலீஸ் ஆன படங்களில் ரூ. 10 கோடி வசூல் சாதனை படைத்த இந்திய படம் ஒன்று உள்ளது.
2013 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு ரூ. 10 கோடி மேல் வசூல் செய்த 'ஷோலே' திரைப்படம் தான் வசூல் சாதனை படைத்த முதல் இந்திய படம்.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
