Final Destination Bloodlines திரை விமர்சனம்

By Sivaraj May 15, 2025 10:30 AM GMT
Report

மரணத்தில் இருந்து தப்பித்தால் விதியின்படி கொடூர இறப்பு வந்தே தீரும் என்ற கதைக்கருவின்படி வெளியாகியுள்ள "Final Destination Bloodlines" ஹாலிவுட் படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம். 

Final Destination Bloodlines திரை விமர்சனம் | Final Destination Bloodlines Movie Review

கதைக்களம்

1968யில் ஐரிஷ் என்ற பெண் தனது காதலருடன் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஸ்கைவியூ என்ற டவர் ஹோட்டலுக்கு செல்கிறார். மிக உயரிய கட்டிடத்தின் உச்சிக்கு இருவரும் செல்லும்போது ஐரிசிற்கு ஏதோ நடக்கப்போவதாக தோன்றுகிறது.

அவரது காதலர் ப்ரொபோஸ் செய்தபின் ஐரிஷ் நினைத்தபடியே பெரும் விபத்து ஹோட்டலில் ஏற்படுகிறது. அதில் இருந்து தப்பிக்க அனைவரும் சிதறி ஓட, ஒவ்வொருவரும் கொடூரமாக இறக்கிறார்கள்.

Final Destination Bloodlines திரை விமர்சனம் | Final Destination Bloodlines Movie Review

கடைசியாக ஐரிஷும், சிறுவன் ஒருவனும் மட்டும் உயிர் பிழைக்க முயற்சிக்கும் தருவாயில் மரணமடைய, ஸ்டேபானி என்ற மாணவி கண்விழிக்கிறாள். அவள் கண்ட கனவுதான் அது என்றாலும், சில மாதங்களாக இந்த ஒரே கனவு வந்து அவரை தொல்லை செய்கிறது.

அதற்கு முக்கிய காரணம் கனவில் கடைசியாக இறப்பது அவரின் பாட்டிதான். இதற்கு தீர்வு காண பாட்டியை தேடி செல்லும் ஸ்டேபானி அவர் கூறும் விஷங்களை கேட்டு அதிர்ச்சியடைக்கிறார்.

Final Destination Bloodlines திரை விமர்சனம் | Final Destination Bloodlines Movie Review

பின் அவரின் கண்முன்னே பாட்டி கொடூரமாக இறக்க, அவர் கொடுத்து ஆராய்ச்சி கட்டுரையை எடுத்துக் கொண்டு தனது குடும்பத்தை மரணத்தில் இருந்து காப்பாற்ற செல்கிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை. 

படம் பற்றிய அலசல்

2000ஆம் ஆண்டில் வெளியான ஃபைனல் டெஸ்டினேஷன் என்ற படத்தின் வரிசையில் வந்துள்ள 6வது பாகம்தான் இந்த ஃபைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன். ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு ஒரு மோசமான விபத்து நடக்கப்போவது முன்கூட்டியே தெரிய வரும்.

அதனை வைத்து அவர் பலரை காப்பாற்ற விதிப்படி அவர்கள் கோரமாக இறப்பார்கள் என்ற அதே லைன்தான் இப்படத்தின் கதை என்றாலும், சில விஷயங்களை மாற்றி விறுவிறுப்பான திரைக்கதையில் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர்கள் ஜாக் லிப்போவ்ஸ்கி மற்றும் ஆடம் ஸ்டெயின்.

Final Destination Bloodlines திரை விமர்சனம் | Final Destination Bloodlines Movie Review

அனைவரும் எதிர்பார்த்த சூப்பர்மேன் படத்தின் பிரம்மாண்ட டிரைலர்..

அனைவரும் எதிர்பார்த்த சூப்பர்மேன் படத்தின் பிரம்மாண்ட டிரைலர்..

ஹீரோயின் கெய்ட்லின் சாண்டா ஜூனா எப்போதும் பதற்றமாக இருக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும் காப்பாற்ற அவர் மெனக்கெடும் காட்சிகளில் தேர்ந்த நடிப்பு.

இரத்தம் தெறிக்க மரணங்கள் நிகழ்வதுதான் ஃபைனல் டெஸ்டினேஷன் பட வரிசையின் பேஸ்லைன். அதனை சிறப்பாக செய்திருக்கிறார்கள். டென்ஷனை கூட்டும் பல காட்சிகள் படத்தில் உள்ளன என்றாலும், முக்கியான ட்விஸ்ட் வெளிப்படும் காட்சியில் ஒரு கேரக்ட்டர் கேட்கும் கேள்விக்கு தியேட்டரில் சிரிப்பலை.

Final Destination Bloodlines திரை விமர்சனம் | Final Destination Bloodlines Movie Review

மருத்துவமனையில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இருவர் எடுக்கும் முயற்சியும், இறுதியில் அதுவே அவர்களுக்கும் வினையாக முடிவதும் செம. எதிர்பார்த்த கிளைமேக்ஸ்தான் என்றாலும் அதனை கனெக்ட் செய்த விதம் கச்சிதம். பிரபல நடிகர் டோனி டாட் நடித்த கடைசிப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

க்ளாப்ஸ்

நடிப்பு

திரைக்கதை

மரணம் நிகழும் காட்சிகள்

மைனஸ்

பெரிதாக ஒன்றுமில்லை

மொத்தத்தில் ஃபைனல் டெஸ்டினேஷன் பட ரசிகர்களுக்கு செம ட்ரீட் இப்படம். இதயம் பலவீனமானவர்கள் மற்றும் குழந்தைகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

Final Destination Bloodlines திரை விமர்சனம் | Final Destination Bloodlines Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US