ஒரு வழியாக சக்தியை பார்த்த ஜனனி, கதறி அழுது நடந்த சோகம்... எதிர்நீச்சல் தொடர்கிறது எமோஷ்னல் எபிசோட்
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
திருச்செல்வம் அவர்கள் பெண் எழுச்சிக்கான கதை என கூறிவிட்டு இப்போது கதையை அப்படியே மாற்றிவைத்து வருகிறார். கடந்த சில வாரங்களாக கதையின் போக்கு ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.

எபிசோட்
இன்றைய எபிசோட் புரொமோவில், ஜனனி சக்தியை தேடிச் சென்றதில் அவரே வில்லனிடம் சிக்குகிறார், துப்பாக்கியை ஜனனியின் நெற்றியில் வைத்து சுட முயற்சிக்கிறார். ஆனால் என்ன ஆகுமோ இன்றைய எபிசோடில் தான் காண வேண்டும்.

அதற்குள் இன்று ஒளிபரப்பாக போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது Preview ஒளிபரப்பாகி இருக்கிறது. அதில் ஜனனி, சக்தி இருக்கும் இடத்திற்கு வந்து அவரது உடைகளை பார்த்து கதறி அழுகிறார்.
பின் அங்கு இருந்து பெட்டியை திறந்து பார்க்கும் போது அதில் சக்தி கொடுமையாக தாக்கப்பட்டு காணப்படுகிறார். அவரைப் பார்த்து ஜனனி, கதறி கதறி அழுகிறார், இதோ வீடியோ,