நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சியில் சினிமா துறை
கடந்த சில வருடங்களாக நடிகர் சல்மான் கானுக்கு கொலைமிரட்டல்கள் வந்துகொண்டிருப்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி இருக்கிறது அரசு.
Lawrence Bishnoi மற்றும் Goldy Brar உள்ளிட்ட கேங்ஸ்டர்கள் சல்மான் கானுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதால் அவருக்கு Y-Plus பிரிவு பாதுகாப்பு அரசு அளித்து வருகிறது.
சல்மான் கான் அவரது பாதுகாப்புக்காக குண்டு துளைக்காத வண்டியை வாங்கி இருக்கிறார். மேலும் சொந்தமாக துப்பாக்கி கையில் வைத்துக்கொள்ளவும் அரசு அனுமதி அளித்து இருக்கிறது.

துப்பாக்கிச்சூடு
இந்நிலையில் இன்று அதிகாலை சல்மான் கான் வசித்துவரும் Galaxy Apartments மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கின்றனர்.
பைக்கில் வந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி இருப்பதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் பாலிவுட் சினிமா துறை பரபரப்பில் இருக்கிறது.
துப்பாக்கியால சுட்டவர்கள் சிசிடிவி வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan