குட் பேட் அக்லி படத்தில் அஜித் மகனாக நடிக்க மறுத்த ஹீரோ.. யார் தெரியுமா
குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இதுவரை உலகளவில் ரூ. 199 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக இறுதி வசூல் மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் அஜித்தின் மகனாக கார்த்திகேயா தேவ் என்கிற நடிகர் நடித்திருந்தார். சலார் படத்தில் நடித்து பிரபலமான இவருக்கு குட் பேட் அக்லி படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முதலில் நடிக்கவிருந்த நடிகர்
ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது மலையாள சென்சேஷனல் நடிகர் நஸ்லன் தானாம். பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் நஸ்லன்.
குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு மகனாக நடிக்க முதன் முதலில் இவரை தான் படக்குழு அணுகியுள்ளனர். ஆனால் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இப்படத்தில் அவரால் நடிக்கமுடியாமல் போய்விட்டது.