சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானா?
மதராஸி படம்
அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் மதராஸி.
ஏ.ஆர்.முருகதாஸுடன், சிவகார்த்திகேயன் முதன்முறையாக கூட்டணி அமைத்த இந்த படத்தில் வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அனிருத் ரவிச்சந்திரனின் இசையமைப்பில் வெளியான பாடல்களும் நல்ல ஹிட் தான். ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.
முதல் சாய்ஸ்
தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க முருகதாஸ் முதலில் அணுகிய நாயகி குறித்த தகவல் வந்துள்ளது.
அவர் வேறுயாரும் இல்லை சீதா ராமன் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மிருணாள் தாகூர் தான் அது.
மாலதி கதாபாத்திரத்தில் முதலில் அவர் தான் நடிக்க இருந்துள்ளாராம், பின் சில காரணங்களால் மிஸ் ஆகியுள்ளது, அதன்பின்னரே ருக்மிணி வசந்த் கமிட்டாகி இருக்கிறார்.