நாட்டாமை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது குஷ்பூ இல்லை.. உண்மையை கூறிய கே.எஸ். ரவிகுமார்
கே.எஸ். ரவிக்குமார்
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனர்களில் பல சூப்பர்ஹிட் கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். நாட்டாமை, முத்து, படையப்பா, தசாவதாரம், வரலாறு என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இதில் சரத்குமார், விஜயகுமார், குஷ்பூ உள்ளிட்டோர் இணைந்து நடித்து 1994ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாட்டாமை. மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்தனர்.
முதல் சாய்ஸ்
இந்த நிலையில், நாட்டாமை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பூ நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது குஷ்பூ கிடையாதாம்.
நடிகை லட்சுமி தான் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் முதல் சாய்ஸ் ஆக இருந்தாராம். அப்போது அவரால் நடிக்கமுடியாமல் போக, அவருக்கு பதிலாக தான் நடிகை குஷ்பூவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தாராம். இந்த தகவலை கே.எஸ். ரவிக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
You May Like This Video

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
