பாகுபலி படத்தில் கட்டப்பா ரோலில் நடிக்க முதலில் தேர்வு ஆனது சத்யராஜ் இல்லையா?- யார் தெரியுமா?
பாகுபலி படம்
தமிழக மக்களுக்கு தெலுங்கு சினிமாவின் டாப் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி நான் ஈ, மகதீரா டப் செய்யப்பட்ட படங்கள் மூலம் அதிகம் அறியப்பட்டார்.
அதன்பின் அவர் பாகுபலி என்ற படத்தை தமிழ் சினிமா நடிகர்கள் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா போன்றவர்களை வைத்து எடுக்க படத்தின் மீது அதிக கவனம் செலுத்தினார்கள் ரசிகர்கள்.
பாகுபலி இரண்டு பாகங்களும் பிரம்மாண்டமாக பல மொழிகளில் வெளியாக இப்போது ராஜமௌலியை தெரியாத சினிமா ரசிகர்களே இல்லை என்று ஆகிவிட்டது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் 2 பாகமாக இயக்கப்பட்ட இந்த படம் அமோகமான வசூல் வேட்டை நடத்தியது.
முதல் சாய்ஸ்
இந்த படத்தில் பாகுபலியை அடுத்து மிகவும் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் கட்டப்பா, இந்த கதாபாத்திரத்தின் மூலம் சத்யராஜ் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கினார் என்று கூறலாம்.
ஆனால் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வானது சத்யராஜ் இல்லையாம், பாலிவுட்டின் டாப் நாயகனான சஞ்சய் தத் தானாம்.
இந்த தகவலை ராஜமௌலியின் தந்தையும், எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
You May Like This Video

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
