'மகாநடி' படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு முன் நடிக்கவிருந்த பிரபல நடிகை யார் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்
மகாநடி
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் அஸ்வின் நாக் இயக்கத்தில் உருவான நடிகையர் திலகம் (மகாநடி) கடந்த 2018 -ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக வெளியான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவே வாழ்ந்திருந்தார். மேலும் இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் தெரியுமா?
இந்நிலையில் மகாநடி படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக நடிக்கவிருந்தது நடிகை நித்யா மேனன் தானாம். ஆனால் சில காரணத்தால் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
அதன் பின் சாவித்திரி கதாபாத்திரத்திற்கு லுக் டெஸ்டில் கீர்த்தி சுரேஷ் பொருத்தமாக இருந்ததால் அவருக்கு இந்த பட வாய்ப்பு சென்றது.