புதுப்பேட்டை படத்திற்கு முதன் முதலில் இசையமைக்க இருந்தது யுவன் கிடையாதாம், வேறு யார் தெரியுமா?
செல்வராகவனின் புதுப்பேட்டை
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் தற்போது நானே வருவேன் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வருகிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று புதுப்பேட்டை. இப்படம் வெளிவந்த நேரத்தில் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், தற்போது தலைமேல் தூக்கி வைத்து புதுப்பேட்டை படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
படத்தை நிராகரித்த இசையமைப்பாளர்
இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது யுவன் ஷங்கர் ராஜாவின் இசை என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு பாடல்களும், பின்னணி இசையும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் இசையமைக்கவிருந்தது யுவன் இல்லையாம். ஹாரிஸ் ஜெயராஜிடம் தான் செல்வராகவன் முதன் முதலில் கதையை கூறியுள்ளார்.
ஆனால், இது எனது ஜெனர் இல்லை என்று கூறிவிட்டாராம் ஹாரிஸ் ஜெயராஜ். இதன்பின், தான் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தில் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் கட்சியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு வந்தது; ஆனால்.. - திருமாவளவன் பரபரப்பு பேச்சு IBC Tamilnadu
