வின்னர் கைப்புள்ள ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்தது வடிவேலு கிடையாது! வேறு யார் தெரியுமா, இதோ பாருங்க
வடிவேலு - கைப்புள்ள
வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடி கிங் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஒன்று கைப்புள்ள. நம் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த கதாபாத்திரங்களில் ஒன்று இது. இப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார்.
முதலில் நடிக்கவிருந்த நடிகர்
ஆனால், முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் வடிவேலு கிடையாதாம். படம் பேசி முடித்தபின், கைப்புள்ள கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் விவேக் தானாம், ஆனால், அப்போது சுந்தர் சி-க்கும், நடிகர் விவேக்கிற்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அப்படத்தில் விவேக் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக தான் வடிவேலுவை கமிட் செய்தாராம் சுந்தர் சி. இந்த தகவலை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சுந்தர் சி பகிர்ந்துகொண்டார்.
மேலும் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்துள்ள அரண்மனை 4 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.