பிதாமகன் படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?
பிதாமகன் படம்
பாலா தமிழ் சினிமாவில் இயக்கிய அனைத்து படங்களுமே ரசிகர்களிடம் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது, அதில் முக்கியமான படம் என்றால் பிதாமகன் கூறலாம்.
2003ம் ஆண்டு சூர்யா, விக்ரம், லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா, கஞ்சா கருப்பு என பலர் நடிக்க வெளியாகி இருந்தது. காமெடி, எமோஷ்னல், காதல் என அனைத்தும் கலந்த கலவையாக படம் அமைந்திருக்கும்.
இப்படம் நடிகர் சூர்யாவிற்கு மிகப்பெரிய பெயரை ஏற்படுத்தி கொடுத்தது என்றே கூறலாம்.
முதல் சாய்ஸ்
இந்த படத்தில் சித்தன் கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி விக்ரம் நடித்திருப்பார்.
ஆனால் சித்தன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரபல நடிகர் முரளி தானாம்.
ஆனால் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் பாலாவிடம் சித்தன் கதாபாத்திரத்தில் விக்ரம் சரியாக இருப்பார் என கூறியுள்ளனர். எனவே இப்படத்தில் கமிட் ஆகி பின்னர் முரளி வெளியேற்றப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.