குடும்பஸ்தன் படத்தை தவறவிட்ட பிரபல நடிகர்.. யார் தெரியுமா
குடிம்பஸ்தன்
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். இவர் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு மக்களிடைய நல்ல வரவேற்பு இருக்கிறது.
குட் நைட, லவ்வர் படங்கள் வெற்றிபெற்ற நிலையில, இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குடிம்பஸ்தன் படமும் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கலக்கிக்கொண்டு இருக்கும் மணிகண்டனின் குடும்பஸ்தன் படம் இதுவரை உலகளவில் ரூ. 12.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
முதலில் நடிக்கவிருந்த ஹீரோ
இந்த நிலையில், மிகப்பெரிய வெற்றியடைந்துள்ள இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது மணிகண்டன் கிடையாதாம். நடிகர் அசோக் செல்வன் தான் இப்படத்தின் கதையை முதலில் கேட்டுள்ளார்.
ஆனால் அவரிடம் அப்போது காலஷீட் இல்லாத காரணத்தினால, இப்படத்தில் மணிகண்டன் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.
அதன்படியே, இப்படத்தின் கதையை மணிகண்டனிடம் இந்த கதையை கூறி ஓகே செய்துள்ளார் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி. இந்த தகவலை குடும்பஸ்தன் படகுழு பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.