முதல் நாள் வசூலில் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் கலக்கிய 5 படங்கள்- சிம்பு மாநாடு டாப்பில் வந்ததா?
தமிழ் சினிமா இல்லை எந்த சினிமா எடுத்துக் கொண்டாலும் பாக்ஸ் ஆபிஸ் சண்டை ரசிகர்களிடம் இருந்துகொண்டு தான் இருக்கிறது.
அதுவும் தமிழ் சினிமாவில் கேட்கவே வேண்டாம், ஒவ்வொரு படத்துக்கும் ரசிகர்களின் சண்டை டுவிட்டரில் அதிகமாக பேசப்படும். இப்போது ரஜினியின் அண்ணாத்த, சிவகார்த்திகேயனின் டாக்டர், சிம்புவின் மாநாடு படங்களுக்கான பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தான் ரசிகர்கள் அதிகம் கவனிக்கிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் சென்னை வசூல் நிலவரங்கள் எந்த படம் வந்தாலும் அடுத்த நாளே வந்துவிடும்.
நேற்று வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் மட்டும் ரூ. 7ல் இருந்து 8 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
எனவே ரசிகர்கள் மாநாடு திரைப்படம் டாப் 5 தமிழ்நாட்டு வசூலில் வர கொண்டாடி வருகிறார்கள்.
சரி இதுவரை வெளியான படங்களில் அதிகம் வசூலித்து சென்னை மற்றும் தமிழ்நாட்டில் டாப் 5ல் வந்த படங்களின் விவரத்தை பார்ப்போம்.
தமிழ்நாடு
- மாஸ்டர்- ரூ. 25 கோடி
- அண்ணாத்த- ரூ. 24.5 கோடி
- கர்ணன்- ரூ. 10.50 கோடி
- மாநாடு- ரூ. 7ல் இருந்து 8 கோடி
- டாக்டர்- ரூ. 6 கோடி
சென்னை
- அண்ணாத்த- ரூ. 1.71 கோடி
- மாஸ்டர்- 1.21 கோடி
- கர்ணன்- ரூ. 0.92 கோடி
- மாநாடு- ரூ. 0.88 கோடி
- டாக்டர்- ரூ. 0.59 கோடி